செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன்களின் வெளியீட்டை நாங்கள் பொதுவாக காண்கிறோம். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஆப்பிள் ஐபோன் 11 தொடர்களை தாமதப்படுத்தக்கூடும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. லாக் டவுன் காரணமாக, சீனாவில் உற்பத்தியாளர்கள் குறைந்தபட்ச மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். இது செப்டம்பரில் பொருட்கள் விநியோகம் மற்றும் விற்பனையையும் பாதிக்கிறது.
புதிய ஐபோனை அறிமுகப்படுத்த ஆப்பிள் அக்டோபர் வரை காத்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது ஐபோனின் வழக்கமான அறிமுகத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு. இதை பற்றி, ஆப்பிள் CFO Luca Maestri கூறுகையில், “கடந்த ஆண்டு செப்டம்பர் வெளியீட்டை விட இந்த ஆண்டு சில வாரங்கள் கழித்து புதிய ஐபோன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.”

மற்றொரு வதந்தியில் ஆப்பிள் தனது 2020 ஐபோன்களை இரண்டு வெவ்வேறு காலங்களில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்தி திட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு 6.1 இன்ச் ஐபோன் மாடல்கள் மட்டுமே முதலில் அறிமுகப்படுத்தப்படலாம், 6.7- மற்றும் 5.4 இன்ச் மாடல்கள் பின்னர் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஐபோன்களின் வெளிவரும் தேதிகளை பற்றி எந்த தகவலும் இது வரை இல்லை. ஆனால் இது வழக்கத்தை விட 2-4 வாரங்கள் கழித்து கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஆகவே அக்டோபர் மாத இறுதியில் நான்கு ஐபோன்களையும் பார்க்கக்கூடும் .