சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள குறைந்தவிலை ஸ்மார்ட் போன்

சாம்சங் நிறுவனம் தற்போது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் புதுவரவு மாடலாக Galaxy M01 Core ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்க்கு முன்னர் சாம்சங் Galaxy M01S அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எம்01 கோர் மாடலில் 5.3 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1480 பிக்சல் Infinity V டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் எம்டி6739 பிராஸர், 1ஜிபி/2ஜிபி ரேம், 16ஜிபி/32ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

Samsung M01 Review

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் அக்செல்லோமீட்டர், விர்ச்சுவல் பிராக்சிமிட்டி சென்சிங் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் சிறப்பம்சங்கள் இதோ:

 • – 5.3 இன்ச் 720×1480 பிக்சல் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
 • – 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6739 பிராசஸர்
 • – பவர்விஆர் ரோக் ஜிஇ8100 ஜிபியு
 • – 1ஜிபி / 2ஜிபி ரேம்- 16ஜிபி / 32ஜிபி மெமரி
 • – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • – ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
 • – டூயல் சிம் ஸ்லாட்
 • – 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
 • – 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
 • – 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 
 • – 3000 எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 1ஜிபி ரேம், 16ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5499 என்றும் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.