Samsung unpacked நிகழ்வில் 7 புதிய கருவிகள் நேற்று வெளியிடப்பட்டன!!!

சாம்சங் பொதுவாக புதிய கேலக்ஸி நோட் மாடல்களை IFA நிகழ்வுகளில் வெளியிடுகிறது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் Samsung-ன் சொந்த unpacked நிகழ்வுக்கு நகர்த்தப்பட்டது. இந்த நிகழ்வு 7 புதிய சாதனங்களுடன் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளது. நிகழ்விலிருந்து லைவ்ஸ்ட்ரீமை நீங்கள் பார்க்கலாம் அல்லது நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களைக் யூடியூபில் காணலாம்.

நேற்று நடந்த இந்த நிகழ்வில், Galaxy Note 20 மற்றும் Note 20 Ultra ஆகியவை வெளியிடப்பட்டது. S 20 ஸ்மார்ட்போன்களின் கேமரா முன்னேற்றங்களில் மற்றும் புதிய S-pen அம்சங்களுடன், இந்த Galaxy Note 20 மற்றும் Note 20 Ultra உருவாக்கப்பட்டன. Note 10 தலைமுறையை விட பேட்டரி ஆயுள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Galaxy Z Fold 2, முந்தைய மாடலை விட ஸ்க்ரீன் மற்றும் கேமராக்களின் அடிப்படையில் ஒரு பெரிய மேம்படுத்தலைக் குறிக்கிறது. இது, முந்தைய மாடல விட இன்னும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது .

பின்னர் இரண்டு Galaxy Tab S7 உள்ளன. இரண்டுமே 120 Hz ஸ்க்ரீன்களை கொண்டுள்ளன மற்றும் S-pen உடன் வருகின்றன. நீங்கள் ஒரு கிபோர்டு கவர் மற்றும் Touchpad-ஐ தனியாக பெற்று, இந்த புதிய tab-ல் இணைத்து பயன் படுத்தமுடியும். எனவே, இந்த Galaxy Tab S7, Samsung Dex உடன் பயன்படுத்த சரியானதாக அமைகிறது.

Samsung Galaxy Watch 3-ல் சுற்றும் edge-ஐ மீண்டும் கொண்டு வரப்பட்டது. இது இரத்த-ஆக்ஸிஜன் அளவை (SpO2) அளவிடும் திறனுடன் வருகிறது, மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் ஈ.சி.ஜி அளவீடுகளையும் காட்டும்.

இந்த புதிய சாதனங்களுடன், Galaxy Buds Live-ம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த Buds Live, சாம்சங்கின் சொந்த முதல் Active Noise Cancelling பட்ஸ் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.