Snapchat ஒரு புதிய அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. இதில் நீங்கள் பதிவுசெய்து அனுப்பும் வீடியோக்களில் பாடல்களை சேர்க்கும் வசதி உண்டு. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அம்சம், Snapchat-ஐ டிக்டாக் உடன் போட்டியிட வைக்கிறது. சில நாடுகளில், டிக்டாக்கை தடை செய்த இந்த நேரத்தில், Snapchat-டின் இந்த அறிவிப்பு வெளியானது. ஜூன் மாத இறுதியில், டிக்டாக் மற்றும் 58 சீனா தயாரித்த பயன்பாடுகளை இந்தியா தடைசெய்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவிலும், ப்ரைவசியின் காரணமாக டிக்டாக்க்கை தடை செய்வதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் வந்த அறிக்கையின்படி, Snapchat-டின் இந்த புதிய பாடல் அம்சம், Snap எடுப்பதற்கு முன் அல்லது எடுத்த பிறகும் கூட பாடல்களை சேர்க்கலாம். இசையுடன் Snap-ஐ பெறும் நண்பர்கள் அந்த Snap-ல் உள்ள பாடலின் தலைப்பையும், பாடகர்கள் மற்றும் ஆல்பத்தின் பெயரையும் காண மேலே ஸ்வைப் செய்யலாம். அதை கிளிக் செய்யும் போது அந்த பாடலின் லிங்க்-ஐ அவர்களால் அணுக முடியும். இது Apple Music, SoundCloud அல்லது Spotify போன்ற இசை ஸ்ட்ரீமிங் தலங்களுக்கு பயனர்களை எடுத்து செல்லும். இப்பொழுது, பயனர்களால் முழு பாடலையும் கேட்க முடியும்.

இந்த அம்சம் முதலில் ஆங்கில மொழி பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். இது ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் Snapchat தெரிவித்துள்ளது. இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள், இந்த புதிய அம்சம் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெளிவர உள்ளது. இது இன்னும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை.
இன்ஸ்டாகிராம் தனது டிக்டாக் போன்ற குளோனை “Reels” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது, இது இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது.
டிக்டாக்க்கு எதிராக, “Shorts” என்ற புதிய பயன்பாட்டை கூகில் அறிமுகப்படுத்தப்படும். இது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளி வரலாம்.
இதற்கிடையில், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான உரையாடலைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தைகளில் வீடியோ பகிர்வு தளமான டிக்டாக்கின் செயல்பாட்டைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தியுள்ளது.