Sony WF-1000XM3 TWS இயர்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளன: விலை மற்றும் விவரக்குறிப்பு இதோ !!!

Sony WF-1000XM3 ட்ரு வயர்லெஸ் இயர்போன்களை இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த இயர்போன்கள் ரூ .19,990-ற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

அறிமுக சலுகையாக, இந்த Sony WF-1000XM3 ரூ .17,990 க்கு கிடைக்கும். நாளை முதல், இதை அமேசான்,Sony-யின் வலைத்தளம் மற்றும் Sony-யின் ரிடெய்ல் கடைகள் மற்றும் பிற ரிடெய்ல் கடைகளில் கிடைக்க கூடும்.

ஒரு மாதத்திற்கு முன்பு, Sony இரண்டு இயர்போன்களை வெளியிட்டது. அவை WF-SP800N மற்றும் WF-XB700 ஆகும். இதில் WF-SP800N-ஐ ரூ .18,990-க்கும் மற்றும் WF-XB700-ஐ ரூ .9,990-க்கும் என Sony நிறுவனம் விற்றது. Sony-யின் WF-1000XM3 TWS இயர்போன்கள், WF-SP800N ஐ விட சிறந்த வடிவமைப்பு மற்றும் விவரங்களைக் கொண்ட சிறந்த TWS இயர்போன்களாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.

Sony WF-1000XM3 இயர்போன்களில் இரண்டு கலர்கள் உள்ளன, கருப்பு மற்றும் வெள்ளை ஆகும் .

Sony WF-1000XM3-யின் சிறப்பு அம்சங்கள் :

  • Sony WF-1000XM3-ல் Dual Noise Sensor-கல் பொறுத்தப்பட்டுஉள்ளது. இந்த சென்சார்கள், புதிய தொழில்நுட்பமான HD Noise Cancelling Processor QN1e உடன் சேர்ந்து, வெளிப்புற சத்தத்தை ரத்து செய்கிறது. இந்த செயல்பாட்டில், இது பின்னணியில் இருந்து அனைத்து வகையான சத்தங்களையும் தடுப்பது மட்டும் இல்லாமல், இந்த இயர்போன்களிருந்து குறைந்த சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது. இதனால், சிறந்த தடையற்ற இசை அனுபவத்தை இதில் பெற முடியும்.
  • பேட்டரி லைப் என்று வரும்போது, Sony WF-1000XM3-ல் தொடர்ந்து 6 மணி நேரம் பயன்படுத்தலாம் மற்றும் சார்ஜிங் கேசில் 24 மணி நேரம் பேக்கப் உள்ளது. இந்த இயர்பட்ஸ் Noise Cancellation Mode-ஐ பயன்படுத்தாத போது, இதில் 32 மணி நேர பேக்கப் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த இயர்போனில் குயிக் சார்ஜ் வசதியும் உள்ளது. இதன் மூலம், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் பயன்படுத்தலாம்.
  • வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது மிகச்சரியாக பொருந்துகிறது மற்றும் நீண்ட நேரம் கேட்கும் நேரத்திலும் கூட உபயோகப்படுத்தலாம் .
  • இத்துடன், Sony WF-1000XM3-ல் கூகுள் அசிஸ்டண்ட் , ஆப்பிள் சிரி மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வாய்ஸ் அஸ்சிஸ்டன்டை பயன் படுத்த வசதிகளும் உண்டு.

இவளவு சிறப்பு அம்சம் கொண்ட இந்த Sony-யின் இயர்போன்கள் Sennheiser-ன் Momentum True Wireless 2 மற்றும் Apple-ன் AirPods Pro-ற்கு நெருக்கமான போட்டியை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.