தொப்பைக்கு குட் பை சொல்லும் மூலிகை டீ (Belly Fat Burning Tea)

கறிமசாலாக்களில் ஒன்றான பட்டை இன்று உடல் எடையால் அவதிப்படுபவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அஞ்சறைப் பெட்டி சமாச்சாரம். இனிப்பு சுவயும், வாசனை தரும் மரப்பட்டை போன்ற பட்டையில் இரு வகை உண்டு. மெல்லிய சீவல் போன்ற பட்டை, சுருள் பட்டை. சுருள் பட்டை தரம் குறைந்தது என்பதால் அதனை வாங்குவதை தவிர்க்கவும்.

பட்டை டீ ( Cinnamon Tea)

இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.அதில் இரண்டு பட்டைகளை போட்டு அதன் வேதிப்பொருட்கள் அனைத்தும் நீரில் இறங்குவதால், நீரின் நிறம் மாறும். இதனை வடிகட்டி அப்படியே அருந்தலாம். விருப்பம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து பருகலாம். காலை வெறும் வயிற்றில் குடித்தால் அதன் பலன்கள் முழுவதும் கிடைக்கும். இரவு உணவுக்கு பின் ஒரு முறை கூட குடிக்கலாம்.

பட்டை (Cinnamon) டீயில் தனியாக இனிப்பு சேர்க்க வேண்டாம். அதுவே ஒரு இயற்கை இனிப்பூட்டி. பட்டை டீயில் இனிப்பு இல்லாமல் குடிப்பதால் இரண்டு ஸ்பூன் சர்க்கரையால் வரும் கிட்டத்தட்ட அறுபது கலோரிகள் குறைகிறது.

பயன்படுத்திய பட்டைகளை தூர எறியாமல், வெயிலில் காய வைத்து எடுத்து வைத்தால் பிரியாணி, புலாவ்களில் மறு சுழற்சியாக பயன்படுத்தலாம்.

* உடல் எடை குறைக்கும் சுவையான ஸ்மூத்தி செய்ய..

பட்டையின் பயன்பாடுகள்

 • பட்டை டீயில் இஞ்சி, மிளகு, ஏலக்காய், புதினா என வித்யாசமான ருசியிலும் குடிக்க முயற்சிக்கலாம்.
 • பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, நாள் முழுவதும் குடிக்கலாம்.
 • மில்க் ஷேக், ஸ்மூத்திகளில் கலந்து குடிக்கலாம்.

பட்டையின் மருத்துவப் பயன்கள்

 • வயிற்றை சுற்றியுள்ள அடர்த்தி மிகுந்த கொழுப்புகளை கரைக்கும்.
 • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
 • இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
 • வயிற்று உபாதைகள் நீங்கும், மலச்சிக்கலை போக்கும்.
 • பாக்டிரியா நோய்த்தொற்று, ஈஸ்ட் தொற்றுக்களை நீக்குகிறது.

பக்கவிளைவுகள் – (Side Effects)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல , அளவுக்கு மீறி பட்டையை உட்கொள்ள வேண்டாம்.

 • பட்டையில் உள்ள “coumarin”, கல்லீரலை பாதிக்கும்.
 • வாய்ப்புண்கள் ஏற்படும்.
 • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் குறைவது கூட கெடுதல் தான்.
 • சில மருந்துகளோடு வினைபுரியும் ஆகவே ஒழுங்கு முறையோடு ஒரு நாள் விட்டு என்பது போல முறைப்படுத்தி பருகவும்.

Cinnamon and Honey is the medicine for weight loss and fat loss. Cinnamon is a thermogenic which produces heat in the body by stimulating our metabolism. Especially, this tea helps great for belly fat burning. It also helps in reducing body weight. But you must also be aware of cinnamon side effects for weight loss. Over dose of cinnamon may lead to some side effects.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.