ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலில் எற்படும் மாற்றம்

ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை படிப்படியாக குறையும். மேலும் இடுப்பு வலி போன்றவை குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும் சீராக இருக்கும்.

உடல் பருமன்  முதல்  மனஅழுத்தம் வரை மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஸ்கிப்பிங்  அல்லது கயிறு தாண்டும் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகை உள்ளன.

ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும்.

ஸ்கிப்பிங் பயிற்சி இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ஸ்கிப்பிங் செய்வதால்  உடல் மற்றும் தண்டுவடம் (back bone) சீராகி உயரமான தோற்றம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால்  இடுப்பு வலி குறைந்துவிடும், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி கிடைக்கும்.

ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை நம்முடைய உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். கயிற்றில் சரியான நீளத்தை தேர்வுசெய்ய வேண்டும் ,  கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயரத்தை சீர்ப்படுத்திக்கொள்ளவேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு.

ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும். ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது.

அதேபோன்று அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும் படி பிடிக்கக் கூடாது. நல்ல தரமான கயிறைப் பயன்படுத்த வேண்டும்.

ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால்:

  • அதிக உயரம் கொண்டவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
  • இதய நோயாளிகள், கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி,  எலும்பு முறிவு உடையவர்கள்.
  • சுளுக்கு ஏற்பட்டவர்கள்  அனைவரும் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.