உடலில் தோன்றும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் ! பெண்களே!

நமது உடல் ஒரு சிறந்த உயிரியல் கடிகாரம். அது சீராக, விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். எங்கோ தடைப்படும் எனும் போது சிறு சிறு சமிக்ஞைகள் காட்டுகிறது. அதனை உணர்ந்து விழித்துக் கொண்டோர் பிழைத்துக் கொள்வார்கள்.

பெண்களின் வலி தாங்கும் திறன் ஆணை விட அதிகம். நான்கைந்து அறுவைச் சிகிச்சை செய்த பெண் அசால்ட்டாக இருப்பாள். அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு குடும்பத்தினரை கவனிப்பாள். இரண்டு நாள் காய்ச்சலுக்கு வீட்டை அதகளம் பண்ணும் ஆண்களும் உண்டு.

நாப்பது வயதை எட்டும் போது பெரும்பாலும் பெண்கள் உடலும், மனமும் சோர்ந்து வியாதிகளின் கூடாரமாக மாறிப்போவது தான் கொடுமை. வாழ்க்கைச் சூழல் குழந்தைகளையும், கணவரையும் வெளிச்சத்தில் நடமாட மனைவியை மெழுகாக உருக்கி விடுகிறது. ஏழை வீட்டு மனைவியும் எட்டடுக்கு வீட்டு கோடிஸ்வரன் மனைவியும் ஒரே விதமான மன அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள்.புலம்பி எதுவும் மாறப்போவதில்லை பெண்ணே! நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

பல்வேறு விதமான புற்றுநோய்கள் பெண்களை தாக்குகிறது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் உஷாராகும் போது வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.

  • மார்பகங்கள் ஏற்படும் மாற்றங்கள்

மார்பக காம்புகளில் ஏதாவது மாற்றம், தோல் சிவந்து அல்லது திடிரென ஆரஞ்சு பழத்தோல் மாதிரி சொரசொரப்பாக மாறுவது, நிப்பிள் இருந்து இரத்தம் கலந்த நீர் வடிதல், வலியற்ற கட்டிகள், வீக்கம், மார்பகங்கள் அளவில் மாற்றம்.

சிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாதீர்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மார்பக சுயப்பரிசோதனை செய்யுங்கள்.

  • இரத்தப்போக்கு

மெனோபாஸ்க்கு பிறகு ஏற்படும் இரத்தப் போக்கு ஓவரியில் உள்ள புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

உடலுறவுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு, மலம், சிறுநீரில் இரத்தத்திட்டுக்கள் வெளிப்படுவது.

  • விடாத இருமல், தொடர்காய்ச்சல்
  • திடிரென எடைக்குறைவு, பசியின்மை, சோர்வு
  • அடிவயிற்றில் வலி
  • அடிக்கடி காய்ச்சல் தோன்றுதல்
  • கழுத்து, அக்குள், கை மடிப்பில் உள்ள தோலில் திட்டுக்கள் (skin bruises)
  • மச்சத்தில் ஏதேனும் மாற்றங்கள்

அறிகுறிகள் உடல் எதிர்க்கொள்ளவிருக்கும் அபாயத்தின் எச்சரிக்கை மணிகள் எனவே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுங்கள்.


Different types of cancer in women/ladies are breast cancer, cervical cancer, endometrial cancer and ovarian cancer. Cancer caused in lower part of the uterus is cervical cancer and cancer caused in female reproductive glands is ovarian cancer. Women should be aware of symptoms such as vaginal discharge colored with blood, loss of appetite, bloated belly, severe weight loss, sore that does not heal, thickening or lump in the breast or elsewhere, change in a wart or mole, indigestion or difficulty in swallowing. Abnormal vaginal bleeding includes bleeding after vaginal sex, after menopause, between periods, and having (menstrual) periods that are longer or heavier than usual.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.