பட்டு புடவைகளை பராமரிக்க பக்கா டிப்ஸ்!

எத்தன்னை விதமான உடை உடுத்தினாலும், பெண்களுக்கு அதுவும் இந்திய பெண்களுக்கு புடவை தரும் அழகு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

காட்டன் புடவை முதல் காஞ்சிபுரம் பட்டு வரை ரகரகங்களாக புடவைகள். எந்த வயது பெண்ணிற்கும் புடவை தரும் கம்பீரமான அழகு.

நடுத்தர வர்க்கத்து பெண்ணே சர்வ சாதாரணமாக நான்கு பட்டு புடவைகளாவது வைத்திருப்பார்.

பட்டு புடவைகளின் அழகை, அது தரும் அந்தஸ்தை, பட்டு உடுத்தும் பெண்ணுக்கு தரும் மிடுக்கு என எத்தன்னை சிறப்புகள் இருந்தாலும், பட்டு புடவைகளை பராமரிக்க பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது.

பட்டு சேலைகளை துவைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

1. பட்டுப்புடவையை குளிர்ந்த சுத்தமான தண்ணீரில் துவைக்கவும்.

2. மூன்று தடவை துவைத்த பின்பு தான் சோப்பு பயன்படுத்தி அதாவது வெஜிடபிள் ஆயில் சோப். அதாங்க நல்ல தரமான குளியல் சோப்

3. காபி, டீ, க்ரேவி கறை இருந்தால் டிரை வாஷ் கொடுக்கவும்.

4. சோப்பிற்க்கு பதிலாக பட்டு புடவையை புரோட்டின் ஷாம்பு கொண்டு மென்மையாக அலசவும்.

5. எக்காரணம் கொண்டும் பட்டுப்புடவைகளை அடித்து துவைக்கவோ, கசக்கி பிழியவோ கூடாது. ஒருமுறை கசங்கி விட்டால் திரும்ப நிவர்த்தி செய்ய முடியாது.

6. நல்ல காட்டன் துணியை (சாயம் போகாத அல்லது வெள்ளை நிற துணி நல்லது) நிழலில் உலர்த்திய புடவை மீது போடும் போது விரைவில் நீரை உறிஞ்சி எடுத்து விடும். புடவையும் வெகு சீக்கிரம் உலர்ந்து விடும்.

7. பட்டுப்புடவையை அயர்ன் செய்யும் போது பார்டர் சரிகை மீது செய்தித்தாளை விரித்து இளம் சூட்டில் அயர்ன் செய்யவும். அதிக சூட்டில் நேரிடையாக அயர்ன் செய்தால் சரிகை கறுத்து விடும்.

கறைகளை எளிதாக எப்படி நீக்குவது?

* கறை பட்ட உடனேவோ , சில நாட்களிலோ ட்ரை வாஷ்க்கு கொடுப்பதே சிறந்தது.

* பெட்ரோல் மாதிரி சிறந்த கறை நீக்கி ஏதும் இல்லை. கறையின் அடர்த்தி, அளவுக்கு ஏற்ப சில துளி பெட்ரோலை தெளித்து, மெதுவாக காட்டன் துணியால் துடைத்து எடுக்கலாம்.

* கடையில் கிடைக்கும் சிறந்த ஸ்டெயின் ரீமூவரை பயன்படுத்தலாம்.

* நெயில் பாலிஷ் ரீமூவரான அசிட்டோன் கூட சிறந்த கறை நீக்கி.

பொறுமையும் , கறைநீக்கிகளை உபயோகப்படுத்திய அனுபவம் இருப்பின் மட்டும் நீங்களே முயற்சி செய்து பாருங்கள். இல்லையெனில் டிரைவாஷ் கடைகளுக்கு கொடுப்பது உத்தமம்.

காஞ்சி பட்டு உடுத்தி தேவதை போல் நடந்து வர சில மெனக்கெடல்கள் தேவைதான்.


Silk(“Pattu” in tamil) saree gives majestic to women, mainly in India. There are lot of varieties in sarees from cotton to Kanchipuram Silk. Silk saree suits women of all ages. Dry cleaning is carried out to remove stains on sarees. Petrol or nalipolish remover(acetone) can be used to remove stains. Get benefited from the tips to make your saree last longer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.